’ஜனநாயகன்’ - ’சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி...’ - மன்சூர் அலிகான்


Its only biryani if ​​you eat it hot... - Mansoor Ali Khan
x

’ஜனநாயகன்’ படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.

சென்னை,

ஜனநாயகன் படம் வெளியாகாதது வேதனையளிப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் தாமதம் நீடித்து வருகிறது.

முன்னதாக ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் தர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்த நிலையில் அதை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வு நேற்று ரத்து செய்தது. படத்தின் வழக்கு மீண்டும் அதே தனி நீதிபதியிடம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து ஜனநாயகன் படம் தள்ளிப்போவதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் ஜனநாயகன் படம் வெளியாகாதது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், "சூடா சாப்பிட்டால்தான் அது பிரியாணி, இரண்டு மாதம் கழித்துச் சாப்பிடுவது பிரியாணி அல்ல. ஜனநாயகன் படம் வெளியாகாதது மிகப்பெரிய வேதனை" என்றார்.

1 More update

Next Story