'என் பெயரில் போலி கணக்குகள்' - ரசிகர்களுக்கு அலர்ட் கொடுத்த கயாடு லோஹர்


I’ve seen so many pages out there...- kayadu lohar
x

கயாடு லோஹரின் பெயரில் எக்ஸ் பக்கத்தில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.

சென்னை,

கடந்த 21-ம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நாயகி கயாடு லோஹர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார்.

டிராகன் படத்தையடுத்து தமிழில் 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயாடு நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், கயாடு லோஹரின் பெயரில் எக்ஸ் பக்கத்தில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன. இதை கவனித்த கயாடு லோஹர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், "சோசியல் மீடியாவில் என்னுடைய இந்த எக்ஸ் கணக்கு தவிர என் பெயரில் எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலிகள், அதில் வெளியாகும் செய்திகள் எதையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாக சரியான நேரத்தில் உங்களுடன் சரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story