இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகை பகிர்ந்த புகைப்படம்

நடிகை ஜெனிபர் தனது நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
வாஷிங்டன்,
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் தற்போது இந்தியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கடந்த 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடிகை ஜெனிபர் தனது நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
அவர் பல புகைப்படங்களை பகிர்ந்திருந்தாலும் அதில் குறிப்பாக ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கருப்பு நிற மேஜை மீது ஒரு ஜாடியில் ரோஜாக்கள் இருந்தன, அதைச் சுற்றி பல சிறிய சிலைகள் இருந்தன.
அதில், லட்சுமி தேவி மற்றும் துர்கா தேவியின் சிலைகளும் இருந்தன. இது அவரது இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Related Tags :
Next Story






