அமெரிக்க சினிமா கண்காட்சியில் பங்கேற்ற கமல்


அமெரிக்க சினிமா கண்காட்சியில் பங்கேற்ற கமல்
x
தினத்தந்தி 7 April 2025 8:55 PM IST (Updated: 7 April 2025 9:56 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவிலிலுள்ள லாஸ் வேகஸில் நடந்த சினிமா தொடர்பான கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்கா,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து தனது 234-வது படமான 'தக் லைப்' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். சமீபத்தில் இந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. தக் லைப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகாசில் நடந்த சினிமா தொடர்பான ஒரு கண்காட்சியில் கலந்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்காவிலிலுள்ள லாஸ் வேகாசில் சினிமா தொடர்பான கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் கலைத்துறையில் வளர்ந்து இருக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய விஷயங்களை பற்றி அங்கு தெரிந்துக் கொள்ளலாம். ஏ.ஐ தொழில் நுட்பங்கள் கலைத்துறையில் எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைப்பற்றி இந்தாண்டு நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story