கிரண் அப்பாவரம் நடிக்கும் "தில்ருபா" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


Kiran Abbavaram’s ‘Dilruba’ locks Valentine’s Day
x

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’கா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'ராஜா வாரு ராணி காரு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தையடுத்து, இவர் "தில்ருபா" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக ருக்சார் தில்லான் நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விஸ்வா கருண் இயக்கி இருக்கிறார். மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் ரெட்டி மற்றும் சரேகாமா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

1 More update

Next Story