'திரு.மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
'திரு.மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
Published on

சென்னை,

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் 'பொம்மக்கா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com