கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு


கிச்சா சுதீப் நடித்துள்ள மேக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
x

விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள 'மேக்ஸ்' படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, இவரது நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' உருவாகி வருகிறது. இப்படத்தில் கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தில் டீசர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கும் எடுக்கப்பட்ட வீடியோவை (மேக்கிங் வீடியோ) நடிகர் கிச்சா சுதீப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story