மலேசிய கார் பந்தயம் - ரேஸ் தொடங்கிய சில நிமிடங்களில் பழுதான அஜித் கார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித் ‘குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பது தெரிந்த கதை. இது அஜித்குமாரின் 64-வது படமாகும்.
ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது. மலேசியாவில் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அஜித் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மலேசியா ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் பங்கேற்ற அஜித்தின் கார், போட்டி தொடங்கிய 3வது நிமிடத்திலேயே ரேடியேட்டர் பழுதானதால்அவரால் போட்டியை தொடர முடியாத சூழல் உருவானது. அஜித் நிறுவனம் எல் எம் பி 3 வகையிலான ரேஸ் காரை பயன்படுத்துகிறது.
இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, “கவலைப்பட ஒன்றுமில்லை. கார் பந்தயத்தில் இதெல்லாம் ஒரு அங்கமாக இருந்தாலும். இது மனதை தளரச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் ” என்றார்.






