ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் முதல் பாடல் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
Published on

சென்னை,

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி ஜூலை மாதத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com