பழகுவதற்கு இனிமையானவர் நயன்தாரா- டப்பிங் இயக்குனர் ஆர்.பி.பாலா


பழகுவதற்கு இனிமையானவர் நயன்தாரா- டப்பிங் இயக்குனர் ஆர்.பி.பாலா
x

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள "டியர் ஸ்டூடன்ட்ஸ்" படத்திற்கு ஆர்.பி.பாலா டப்பிங் செய்துள்ளார்.

திரை உலகில் பிரபல டப்பிங் இயக்குனராக இருப்பவர் ஆர்.பி.பாலா. "புலிமுருகன், துடரும், நரிவேட்டை, லோகாசேப்டர்-1" உள்பட பல மலையாள படங்களுக்கு தமிழில் டப்பிங் செய்துள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான "புலிமுருகன்" ரூ.150 கோடியை வசூலித்தது. தற்போது நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகி உள்ள "டியர் ஸ்டூடன்ட்ஸ்" படத்திற்கும் டப்பிங் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 20 வருடங்களாக டப்பிங் துறையில் இருக்கிறேன். மோகன்லால் சினிமாவில் உள்ள 24 கிராப்ட்களும் தெரிந்தவர். அவருடன் பணியாற்றுவது சவாலாக இருக்கும்.

நயன்தாரா பழகுவதற்கு இனிமையானவர். நல்ல அர்ப்பணிப்போடு பணியாற்றுவார். மொழி உச்சரிப்பு நன்றாக இருக்கும். நல்ல திறமையுடன் அமைதியானவர் நயன்தாரா." இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story