ஆட்சேபகரமான காட்சிகள் - ''மனுஷி'' படத்தை பார்க்க நீதிபதி முடிவு


Objectionable scenes - Judge decides to watch the movie Manushi
x

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தை வருகிற 24-ந்தேதி பார்க்க போவதாக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள், வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மாற்று நிவாரணம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, ஐகோர்ட்டுதான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருகிற 24-ந்தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் மனுஷி படத்தை பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும்.

அப்போது, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்த சென்சார் போர்டு குழு உறுப்பினர்களும், பட தயாரிப்பாளர் வெற்றி மாறனும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

1 More update

Next Story