ஹர்னித் - பிரீத்தி முகுந்தன் படத்துடன் மோதும் பகத் பாசில் - கல்யாணி படம்

இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சென்னை,
இந்த ஓணம் பண்டிகை மலையாள சினிமா பிரியர்களுக்கு சிறப்பாக அமைய போகிறது. பகத் பாசிலின் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' மற்றும் ஹிருது ஹாரூனின் 'மைனே பியார் கியா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன.
பகத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் 'ஓடும் குதிரை சாடும் குதிரை' படம் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அல்தாப் சலீம் இயக்கும் இப்படத்தில் இளம் நடிகை ரேவதி பிள்ளை, வினய் கோட்டை, லால், சுரேஷ் கிருஷ்ணா, லட்சுமி கோபாலசாமி, வினீத் தட்டில் டேவிட், பாபு ஆண்டனி, நோபி மார்கோஸ், வினீத் வாசுதேவன், சாப்பாய், அனுராஜ் ஓபி ஆகியோர் நடித்துள்ளனர்.
அதே நாளில், ஹிருது ஹாரூன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்திருக்கும் 'மைனே பியார் கியா' படமும் வெளியாக உள்ளது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.






