அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது சினிமாவில்தான் முடியும் - நடிகை ரோஜா

நடிகை ரோஜா, லெனின் பாண்டியன் பட செய்தியாளர் சந்திப்பில், விஜய் அரசியல் குறித்து மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது சினிமாவில்தான் முடியும் - நடிகை ரோஜா
Published on

சென்னை,

2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பின்னர் ரோஜா அரசியலில் கவனம் செலுத்தினார். தற்போது ரோஜா தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, லெனின் பாண்டியன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு திரும்பி உள்ளார்.இப்படத்தில் கங்கை அமரன், சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஸ்ரீதா ராவ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்துள்ள ரோஜா, அந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் நடிகர்களெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று கூறினார்.

ரோஜா, விஜய்யின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், விஜய் நேரில் சென்றதால் தான் இந்தப் பிரச்சனை என்று சிலர் திட்டுகிறார்கள். அவர் செல்லவில்லை என்றாலும் திட்டுகிறார்கள் என்று கூறினார். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், அத்திட்டங்களால் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தேர்தலுக்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நிலவும் அரசியல் சூழல்தான் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் என்று தனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் ரோஜா கருத்துத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com