"எங்க அப்பா அரிவாளை எடுத்து.." மாரி செல்வராஜிடம் சீமான் சொன்ன பிளாஸ்பேக்


எங்க அப்பா அரிவாளை எடுத்து.. மாரி செல்வராஜிடம் சீமான் சொன்ன பிளாஸ்பேக்
x
தினத்தந்தி 6 Nov 2025 10:31 AM IST (Updated: 6 Nov 2025 11:03 AM IST)
t-max-icont-min-icon

பைசன் படத்தை பார்த்து நான் வியந்துட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் அருமையான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், பைசன் படத்தினை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "இந்த படம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாது.. ரொம்ப நல்லா இருக்கு. சரியான நேரத்தில் சரியான படைப்பை தந்திருக்காரு மாரிசெல்வராஜ். படைப்பின் நேர்மையால் அவரின் படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். படத்தை பார்த்து நான் வியந்துட்டேன். நான் ரசிகனா இருக்குற நடிகர்ல துருவ் ஒருவர்." என்று பாராட்டி பேசினார்.

மேலும், "பரோட்டாவுக்காக பந்தயம் கட்டி கபடி விளையாடுனவுங்க நாங்க. நான் கபடி விளையாட போகும் போதுலாம் எங்க அப்பா அரிவாள் எடுத்து விரட்டி இருக்காரு. படத்தை பார்த்ததும் எனக்கு அதுலாம் நியாபகம் வந்துடுச்சு". என்று இயக்குனர் மாரி செல்வராஜிடம் சீமான் தன்னுடைய பிளாஸ்பேக் கதையை கூறியுள்ளார்.

1 More update

Next Story