‘படையப்பா’ ரீ-ரிலீஸ் ; புதிய டிரெய்லர் வெளியீடு


Padayappa trailer is out now
x
தினத்தந்தி 10 Dec 2025 8:00 PM IST (Updated: 10 Dec 2025 8:00 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

சென்னை,

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸாகும் நிலையில் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, இந்தப் படம் வரும் 12ம் தேதியில் ரீ-ரிலீஸாகிறது.

ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ‘படையப்பா’ படம் திரைக்கு வருகிறது . ‘படையப்பா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

1 More update

Next Story