விஜய்யுடன் இருக்கும் புகைப்படம்: விமர்சனங்களுக்கு திரிஷா பதிலடி


விஜய்யுடன் இருக்கும் புகைப்படம்: விமர்சனங்களுக்கு திரிஷா பதிலடி
x

நடிகை திரிஷா விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தநிலையில், அந்த புகைப்படம் விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கியது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது.

இதற்கிடையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி (கடந்த 22-ந் தேதி), தனது செல்ல நாய்க்குட்டியை விஜய் தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை திரிஷா வெளியிட்டு, 'சிறப்பானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கியது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் விமர்சனங்களுக்கு நடிகை திரிஷா பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எப்போது அன்பு மிகுதியாக இருக்கிறதோ, அப்போது தவறான மனதுடைய மனிதர்களுக்கு குழப்பம் ஏற்படத்தான் செய்யும்'' என்று குறிப்பிட்டு உள்ளார். திரிஷாவின் இந்த பதிவு பரபரப்பாக பேசப்படுகிறது.

1 More update

Next Story