டப்பா ரோலில் நடிப்பதற்கு 'ஆன்டி' ரோல் எவ்வளவோ மேல் - சிம்ரன்


டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆன்டி ரோல் எவ்வளவோ மேல் -  சிம்ரன்
x

நடிகை சிம்ரன் தன்னை ஆன்டி ரோலில் நடிக்கும் நடிகை என கிண்டல் செய்த சக நடிகைக்கு காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், ராக்கெட்ரி ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது வரைக்கும் நடிகர் விஜய்க்கு சமமாக நடனம் ஆடிய ஒரே நடிகை என்ற பாராட்டைப் பெற்றவரும் அவர்தான். நடிகை சிம்ரன் திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாயகியாக அல்லாமல் நல்ல கதைகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 'குட் பேட் அக்லி' படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். தற்போது, நடிகர் சசிகுமாருடன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் குமார் இயக்கி வரும் 'தி லாஸ்ட் ஒன்' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு நடந்தது குறித்து ஆதங்கமாகப் பேசியுள்ளார். அதில் சிம்ரன் "சமீபத்தில் சக நடிகையிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, 'உங்களைப் போல 'ஆன்டி' கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது' எனப் பதில் வந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம். நான் 25 வயதிலேயே 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் அம்மாவாக நடித்துவிட்டேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தில் நடிக்கலாம். நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்கு எப்போதும் நம்பிக்கை தேவை" என சிம்ரன் கூறினார்.

சிம்ரனை மோசமாக பேசிய அந்த நடிகை யாராக இருக்குமென பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும், இவரா அல்லது அவரா என மேன்மேலும் விவாதத்தை கிளப்பி வருகிறார்கள்

1 More update

Next Story