இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2' படம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2 தி ரூல்' படம் உலக அளவில் ரூ.1871 கோடி வசூல் செய்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2' படம்
Published on

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பிய இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக ரூ.1,000 கோடி எட்டிய பெருமை புஷ்பா 2 படத்திற்கு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.1871 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையை படைத்து இப்படம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தங்கல் மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com