அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்


Rajinikanth congratulates Ajith
x

பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார். அந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருக்கிறார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து கூறினார்

1 More update

Next Story