புஷ்பா 2-ஆல் தள்ளிப்போன ராஷ்மிகா மந்தனாவின் மற்றொரு படம் ?


Rashmika Mandannas Chhaava postponed due to Pushpa 2
x

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடித்து முடித்துள்ள படம் 'சாவா'.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா2 தி ரூல் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் வரும் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடித்து முடித்துள்ள படம் 'சாவா'. விக்கி கவுசல் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை லக்சுமன் உடேகர் இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ராஷ்மிகா மந்தனா நடித்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோத இருந்தது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சாவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story