ரீ-ரிலீஸாகும் “ப்ரண்ட்ஸ்” படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது

விஜய், சூர்யா, வடிவேலு நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வரும் 21 ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
ரீ-ரிலீஸாகும் “ப்ரண்ட்ஸ்” படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது
Published on

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ப்ரண்ட்ஸ் . மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு, நட்பின் ஆழமான கதைக்களமும், அதிரடியான நகைச்சுவையும் தான் முக்கியக் காரணம். ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் கதை, மூன்று நண்பர்களின் ஆழமான பாசம், காதல் மற்றும் குடும்பப் பிணைப்புகளை மையமாகக் கொண்டது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் ப்ரண்ட்ஸ் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. ப்ரண்ட்ஸ் படத்தை மீண்டும் வருகிற 21-ந் தேதி ரீ-ரிலீஸாகிறது இப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ரீ-ரிலீஸான கில்லி திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை வசூல்செய்ததாகக் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com