ஷாருக்கான் - கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை

‘தில்வாலே துல்ஹனியா’ படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஷாருக்கான் - கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை
Published on

லண்டன்,

லண்டனில் உள்ள லெஸ்டர் கொயர் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கு சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற பெயரில் பிரபல நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சிலைகள் திரைப்பட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஹாரிபாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன் உள்பட பல கதாபாத்திரங்களில் சிலைகள் இங்கு உள்ளன. இந்த வரிசையில் தில்வாலே துல்ஹனியா இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி செலவில் தயாரான இந்த படம் 102 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் தில்வாலே துல்ஹனியா படம் கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தினமும் ஒரு காலை அல்லது பகல் காட்சியாக திரையிடப்பட்டு வந்தது.

 ஷாருக்கான், கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்படும் முதல் இந்திய பட உலோக சிலை இதுதான். இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கானும், கஜோலும் கலந்து கொண்டார்கள். 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com