சண்முக பாண்டியனின் "படை தலைவன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு


சண்முக பாண்டியனின் படை தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

சண்முக பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான 'உன் முகத்தை பார்க்கலையே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

'படை தலைவன்' படம் மே 23ம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்பதாக சண்முக பாண்டியன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 'படை தலைவன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story