`குட் பேட் அக்லி' நடிகர் இனி நடிக்க தடை?


Shine Tom Chacko likely to be banned from films
x
தினத்தந்தி 21 April 2025 6:49 AM IST (Updated: 29 April 2025 12:02 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

திருவனந்தபுரம்,

'குட் பேட் அக்லி' பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ தொடர்ந்து நடிக்க தடை விதிக்க கேரள பிலிம் சேம்பர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் போதை பொருள் பயன்படுத்தியதாக, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். மேலும், அவர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

போலீசாரின் விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனவும், நடிகையிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை எனவும் ஷைன் டாம் சாக்கோ வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிலிம் சேம்பர் நிர்வாக குழு கூட்டம் கொச்சியில் நடைபெறவுள்ளது. அதில் நடிகர் சாக்கோ தொடர்ந்து நடிப்பதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு பணம் அனுப்பினாரா? என்ற அடிப்படையில் நடிகரின் வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story