’மிகவும் எதிர்பாராதது’...’ஜன நாயகன்’ வெளியாகாதது பற்றி பேசிய சிவகார்த்திகேயன்


Sivakarthikeyan On Vijays Jana Nayagan Delay And Parasakthi Release
x
தினத்தந்தி 9 Jan 2026 8:11 PM IST (Updated: 10 Jan 2026 6:51 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் நாளை வெளியாக உள்ளது. இது அவரது 25வது படம் என்பதால் இது அவருக்கு ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது. அதே சமயம், இன்று விஜய்யின் ' ஜன நாயகன்' படம் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் வெளியாகவில்லை.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டநிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது. பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் சிவகார்த்திகேயன் பத்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜன நாயகன் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது , ​​அதற்கு அவர் கூறுகையில், "இது மிகவும் எதிர்பாராதது. படம் தள்ளிப்போகும் என்று யாரும் நினைக்கவில்லை. இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கடந்த 15 நாட்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துள்ளன.

நான் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. இந்த திரையுலகில் அனைவருக்கும் இடம் உள்ளது. நான் போட்டியிட விரும்பினால், ஒரு தடகள வீரராகவோ அல்லது குத்துச்சண்டை வீரராகவோ மாறியிருப்பேன்" என்றார்.

1 More update

Next Story