சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியீடு

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது அந்த படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தனது 9வது புதிய படத்தினை பேஸன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நாளை மாலை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வீடியோவில் ஒரு பாட்டி கடவுள்கள் அடங்கிய புகைப்படங்களுக்கு முன்பு வந்து நிற்பது போல காட்சிகள் உள்ளன.






