"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்


ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்
x
தினத்தந்தி 16 April 2025 9:18 AM IST (Updated: 26 May 2025 3:29 PM IST)
t-max-icont-min-icon

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதாவது, கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற உள்ளன.

முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், "எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், ஜெயிலர் படத்தில் நான் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story