மலேசியாவில் திடீர் மழை....``மேகமாய் வந்து போகிறேன்’’ பாடலுக்கு வைப் செய்த ரசிகர்கள்


Sudden rain in Malaysia... Fans grooved to the song I come and go like a cloud
x

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை பெய்தது.

மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் திடீர் மழை பெய்ததால், விஐபி சீட்டில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் விஜய்யின் ``மேகமாய் வந்து போகிறேன்’’ என்ற பாடல் டைமிங்கில் ஒலிக்கவே, மழையோடு ரசிகர்கள் வைப் செய்தனர்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று விமானத்தில் மலேசியாவுக்கு சென்றனர்.

இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story