சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிகாந்துக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து


சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிகாந்துக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
x
தினத்தந்தி 13 Aug 2025 10:34 AM IST (Updated: 13 Aug 2025 10:54 AM IST)
t-max-icont-min-icon

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

சென்னை,

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இவர் தற்போது தமிழ் சினிமா மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழ்கிறார். இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 'கூலி' திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாகும்

இந்த நிலையில், நடிகர் ரஜினி சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி அவருக்கும் திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "திரையுலகின் மாபெரும் நாயகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி. சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது. இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க. நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story