அருண் விஜய்யின் "ரெட்ட தல" படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 28 July 2025 8:54 PM IST (Updated: 7 Aug 2025 10:14 AM IST)
t-max-icont-min-icon

அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.

சென்னை,

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் வெளியான வணங்கான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இவர், கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

'ரெட்ட தல' படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் டி சீரிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story