சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!


சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
x
தினத்தந்தி 15 Nov 2025 12:37 PM IST (Updated: 28 Nov 2025 10:49 PM IST)
t-max-icont-min-icon

பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவி இணந்து ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிக்கிறார்.

பிரவீன் சரவணன் இயக்கும் இந்த படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார்.

டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 More update

Next Story