வைரலாகும் கீர்த்தி சுரேஷின் 'அக்கா' பட பர்ஸ்ட் லுக் டீசர்


The first look teaser of Keerthy Sureshs Akka goes viral
x
தினத்தந்தி 4 Feb 2025 6:22 AM IST (Updated: 4 Feb 2025 7:04 AM IST)
t-max-icont-min-icon

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'அக்கா' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் அட்லி தயாரிப்பில் உருவான 'பேபிஜான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார்.

இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்திற்கு 'அக்கா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஒய்.ஆர்.எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் ராதிகா ஆப்தே, ஆதித்யா சோப்ரா, யோகேந்திர மோக்ரே மற்றும் அக்சயே விதானி, தன்வி ஆஸ்மி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story