28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் 2ம் பாகம்


The second part is coming to the screen after 28 years
x

இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

சென்னை,

பாலிவுட் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்த ஒரு போர் சம்பந்தப்பட்ட படம் பார்டர். ஜே.பி. தத்தா இயக்கிய இந்தப் படம் 1997-ல் வெளியானது.

இதில், சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், அக்‌ஷய் கன்னா மற்றும் சுனில் ஷெட்டி போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. இதில் சன்னி தியோலுடன், வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுராக் சிங் இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

1 More update

Next Story