28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் 2ம் பாகம்

இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.
The second part is coming to the screen after 28 years
Published on

சென்னை,

பாலிவுட் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்த ஒரு போர் சம்பந்தப்பட்ட படம் பார்டர். ஜே.பி. தத்தா இயக்கிய இந்தப் படம் 1997-ல் வெளியானது.

இதில், சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், அக்ஷய் கன்னா மற்றும் சுனில் ஷெட்டி போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. இதில் சன்னி தியோலுடன், வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுராக் சிங் இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com