நாளை வெளியாகும் 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர்

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர்
Published on

சென்னை,

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தன் முதல் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2-வது டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணியளவில் 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com