"பாகுபலி தி எபிக்" படத்தின் டிரெய்லர் வெளியானது!

"பாகுபலி தி எபிக்" படத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.
Published on

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக "பாகுபலி தி எபிக்" என்ற பெயரில் வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் 3 மணி 45 நிமிட நேரம் ரன் டைம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாகுபலி தி எபிக் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com