'தக் லைப்' படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு


தக் லைப் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2025 9:44 PM IST (Updated: 19 May 2025 5:48 PM IST)
t-max-icont-min-icon

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 17-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story