'பைரவம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு


பைரவம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
x

விஜய் கனகமெடலா இயக்கத்தில் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'பைரவம்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது இவர், தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளார். விஜய் கனகமெடலா இயக்கும் 'பைரவம்' படத்தில் அவர் நடித்துள்ளார். இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இது தமிழில் வெளியான 'கருடன்' படத்தின் ரீமேக்காகும்.

இப்படம் வருகிற 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story