'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு


தினத்தந்தி 31 March 2025 5:44 PM IST (Updated: 9 April 2025 7:38 PM IST)
t-max-icont-min-icon

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தன் முதல் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஒரு நாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

1 More update

Next Story