''சினிமாவில் விஜய், அஜித் இடம் காலி ஆகாது'' - நடிகர் அருண் பாண்டியன்


Vijay and Ajiths place in cinema will never be vacant - Actor Arun Pandian
x

அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும்''அஃகேனம்'' படத்தை தயாரித்திருக்கிறார்.

சென்னை,

சினிமாவில் விஜய், அஜித் என யாருடைய இடமும் காலி ஆகாது என்று நடிகர் அருண் பாண்டியன் கூறியுள்ளார்.

அருண்பாண்டியன் தற்போது தனது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும்''அஃகேனம்'' படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் நடைபெற்ற இப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தர் அவர், நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கர் குழுவில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சினிமாவில் விஜய், அஜித் என யாருடைய இடமும் காலி ஆகாது என்றும் தெரிவித்தார்.

கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, இயக்குனர் பாயல் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கு ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.


1 More update

Next Story