விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தின் ரிலீஸ் அப்டேட்


விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் படத்தின் ரிலீஸ் அப்டேட்
x

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கலைப்புலி எஸ் தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவமாக இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ள படமென்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் நடித்து வருகின்றனர். டெவில் படத்திற்கு பிறகு இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.டார்க் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் முன்னதாக உருவாகியுள்ள 'பிசாசு 2' படத்திற்கு முன்னதாக 'டிரெயின்' படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story