’ஆர்யன்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி மாற்றம்

ஆர்யன், வருகிற 31 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை,
விஷ்ணு விஷாலின் கிரைம் திரில்லர் படமான ஆர்யன், வருகிற 31 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பு நவம்பர் 7-ம் தேதி திரைகளில் வெளியாக உள்ளது. ரவி தேஜாவின் மாஸ் ஜதாரா மற்றும் எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி: தி எபிக் ஆகிய படங்கள் 31-ம் தேதி வெளியாக உள்ளதால் விஷ்ணு விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ரவி தேஜா -ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ் ஜதாரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
Related Tags :
Next Story






