மாரி செல்வராஜ்-துருவ் விக்ரமின் 'பைசன்' பட ரிலீஸ் எப்போது?


When will Mari Selvaraj-Dhuruv Vikrams Bison release?
x

இந்த படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, 'கர்ணன், மாமன்னன்' மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து ஆதித்யா வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story