மக்கள் குறைகளை ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள் நிதின் கட்கரி சார்? - “டீசல்” பட இயக்குநர்

புதிய சாலை விதிகளை உருவாக்கி அதை பின்பற்ற வேண்டுகிறேன் என்று ‘டீசல்’ பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று இரவு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர்கள் உள்பட 43 பேர் பயணம் செய்தனர். அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூர் மண்டலம் சின்னடேக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உளிந்த கொண்டா கிராஸ் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டதுடன் அதன் பெட்ரோல் டேங்க் உடைந்து பஸ்சில் தெறித்ததில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது கண்இமைக்கும் நேரத்தில் பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். தீப்பிடித்து எரிந்ததும் பஸ் டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் இருவரும் பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டனர். பயணிகள் பலர் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜன்னல் வழியாக கீழே குதித்து சிலர் உயிர் தப்பினார்கள், 19 பயணிகளை பிணமாக மீட்டனர். இந்த கோர விபத்தில் 20 பேர் பலியாயினர்,.
இந்த நிலையில், ‘டீசல்’ பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி,, தன் எக்ஸ் பக்கத்தில், “நெடுஞ்சாலைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் மிக மோசமாக சாலைவிதியை பின்பற்றாமல், வாகனங்களை இயக்குவது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பல பதிவுகளை நான் வெளியிட்டு வந்தேன்'' என்றார். என் போன்ற பலரின் பதிவுகளையும் கண்டேன். ஆனால் அரசு, அதுகுறித்து கவனம் செலுத்தாமல் விட்டதன் விளைவு, இவ்வளவு உயிர் பலியாகி இருக்கிறது. மக்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏன் கவனிக்க மறுத்து விடுகிறீர்கள் நெடுச்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சார்? போர்க்கால அடிப்படையில் புதிய சாலை விதிகளை உருவாக்கி அதை பின்பற்ற வேண்டுகிறேன். ஐதராபாத் பெங்களூரு சாலை தனியார் பேருந்து விபத்தில் பலியான அனைவரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.






