சித்தார்த்தின் "டெஸ்ட்" படத்தை பாராட்டிய அஸ்வின்


சித்தார்த்தின் டெஸ்ட் படத்தை பாராட்டிய அஸ்வின்
x
தினத்தந்தி 14 March 2025 6:24 PM IST (Updated: 14 March 2025 6:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'டெஸ்ட்' படத்தில் நடித்த சித்தார்த்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான் 'டெஸ்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

சித்தார்த்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. இதை தமிழக வீரர் அஸ்வின் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் "சித்தார்த்தின் 'டெஸ்ட்' புரோமோவை பார்க்கும்போது கிரிக்கெட்டில் பல காலமாக இருந்தவர்போல் இருக்கிறார். அவரது தொழில்நுட்ப புரிதல், விளையாட்டு மீதான காதல் அவரது பயிற்சிகள் எல்லாம் இன்று திரையில் தெரிகிறது. இந்தப்படம் சித்தார்த்துக்கு சிறப்பான ஒரு படமாக இருக்கும். இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வவை அறிவித்த அஸ்வின் ஐ.பி.எல் தொடரில் மீண்டும் சி.எஸ்.கே அணியில் களமிறங்கவுள்ளார்.

1 More update

Next Story