ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”...எதில், எப்போது பார்க்கலாம்?

பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ஐரே’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”...எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் டைஸ் ஐரே படத்தில் மோகன்லாலின் மகன், பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

டைஸ் ஐரே என்தன் பொருள், ஆன்மாக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படும் இறுதித் தீர்ப்பு என்பதாகும். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

நாயகன் பிரணவ் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் பேய்க்கதையுமாக உருவான இப்படம் கடந்த அக்டோபர் 31 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பும் கவனம் பெற்றதால் ஹாரர் தருணங்கள் ரசிகர்களிடம் பயத்தைக் கொடுத்தது. இப்படம் 25 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.

இந்த நிலையில், டைஸ் ஐரே படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com