இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
| படங்கள் | ஓடிடி தளங்கள் |
| யோலோ | டென்ட்கொட்டா |
பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |
சென்னை பைல்ஸ் முதல்பக்கம் | ஆஹா தமிழ், டென்ட்கொட்டா |
மாய புத்தகம் | சிம்பிலி சவுத் |
தணல் | பிரைம் வீடியோ |
டியர் ஜீவா | டென்ட்கொட்டா |
"யோலோ"
மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "யோலோ". இந்த படத்தில் புதுமுகம் தேவ் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் இன்று (16ந் தேதி) டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
"பைனல் டெஸ்டினேஷன்: பிளட்லைன்ஸ்"
பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். இந்த படத்தின் 6வது பாகம் 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்'.இதில் மறைந்த நடிகர் டோனி டோட், பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்ற ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
"சென்னை பைல்ஸ் முதல்பக்கம்"
வெற்றி நடிப்பில் சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ள படம் "சென்னை பைல்ஸ் முதல்பக்கம்". இதில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (17ந் தேதி) ஆஹா தமிழ் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளது.
"மாய புத்தகம் "
ராம ஜெயபிரகாஷ் இயக்கத்தில் முன் ஜென்ம கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் "மாய புத்தகம்". இதில் அசோக் குமார், அபர்ணதி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"தணல்"
அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியுள்ள படம் "தணல்". இதில் அஸ்வின், லாவண்யா, பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் ஜேனரில் உருவான இந்த படம் நாளை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"டியர் ஜீவா"
பிரகாஷ் வி பாஸ்கர் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் "டியர் ஜீவா". இதில் டிரிச்சி சரவணன் குமார், தீபஷிகா, மனிஷா, விக்ரம் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் திருமண உறவின் உணர்வுகளை பேசும் இப்படம் வருகிற 19ந் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.






