காமன்வெல்த் போட்டி: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 2வது பதக்கம்
பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா பூஜாரி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார்.
55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி கலந்துகொண்டார்.
அவர் மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதனால், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது.
Gururaja Poojary clinches India's second medal of #CommonwealthGames 2022 by winning bronze in men's 61kg weightlifting event.https://t.co/SoGEGCu4kj
— Firstpost Sports (@FirstpostSports) July 30, 2022
Sanket Sargar finished fractionally short of Malaysia's Aniq Kasdan's total lift of 249kg, collecting silver and winning #TeamIndia's first medal of @birminghamcg22 in the process #B2022
— Firstpost Sports (@FirstpostSports) July 30, 2022
Report: https://t.co/IkNaRF93GV