காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா 161 ரன்கள் குவிப்பு


காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா 161 ரன்கள் குவிப்பு
x

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்துள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோது வருகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கணை பெத் மூனி 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story