கண்ணாடி பாட்டில் அலங்காரம்

கண்ணாடி பாட்டில் அலங்காரம்
x
தினத்தந்தி 18 Sept 2022 7:00 AM IST (Updated: 18 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பல வண்ண கூழாங்கற்களை படத்தில் உள்ளது போல பாட்டில் முழுவதும் பசைக் கொண்டு ஒட்டவும். பாட்டிலின் உள்ளே வண்ண விளக்குகளை ஒளிர விடவும். இரவில், மின் விளக்கின் ஒளி கூழாங்கற்களால் சிதறடிக்கப்பட்டு அறை முழுவதும் ஜொலிக்கும்.

வீடுகளில் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டு எளிய முறையில், நேர்த்தியான அழகு தரும் வகையில், கண்ணாடி பாட்டில்களை அலங்கரிப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.

1. கூழாங்கற்கள்

நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பல வண்ண கூழாங்கற்களை படத்தில் உள்ளது போல பாட்டில் முழுவதும் பசைக் கொண்டு ஒட்டவும். பாட்டிலின் உள்ளே வண்ண விளக்குகளை ஒளிர விடவும். இரவில், மின் விளக்கின் ஒளி கூழாங்கற்களால் சிதறடிக்கப்பட்டு அறை முழுவதும் ஜொலிக்கும்.

2. சணல் நூல் அலங்காரம்

படத்தில் உள்ளவாறு, பாட்டில் முழுவதும் பசைத் தடவி சணல் நூலைச் சுற்றவும். அது நன்றாக உலர்ந்த பின்பு, அதன் மேல்

உங்களுக்கு விருப்பமான நிறத்தில் வண்ணம் பூசி, கடல் சிப்பி, பிளாஸ்டிக் பூக்கள் அல்லது பிஸ்தா ஓடுகள் போன்றவற்றை விதவிதமான வடிவங்களில் ஒட்டிக்கொள்ளவும்.

3. வண்ணக்கலவை

கண்ணாடி பாட்டிலின் மேல் விருப்பமான நிறத்தில் வண்ணம் பூசவும். அது நன்றாக உலர்ந்ததும், பாட்டிலின் மேல் உங்களுக்கு பிடித்த பறவை அல்லது பூக்களின் உருவங்களை வரைந்து, உள்ளே அலங்கார விளக்குகள் வைத்து ஒளிர விடவும்.

மேலே குறிப்பிட்டவை மட்டுமில்லாமல், வண்ண நூல், அரிசி மற்றும் கிளிட்டர் போன்ற பல பொருட்களாலும் கண்ணாடி பாட்டில்களை அலங்கரிக்கலாம்.

1 More update

Next Story